செவ்வாய், 24 மார்ச், 2009

நான் ?

நான்
மருத்துவராக வேண்டும்
என்றார் தந்தை

ஆசிரியராக வேண்டும்
என்றார்
தாய்

பொறியாளர்
என்றான்
அண்ணன்

சாஃப்ட்வேர் படி
என்றாள்
அக்கா

இலக்கியம் படி
என்றார்
ஆசிரியர்

அரசியல்வாதியாகலாம்
என்றான்
நண்பன்

ஆளுக்கொரு
ஆசைகள்,எண்ணங்கள்.
அவரவர் பாதைகள்
அவரவருக்கு.

மனிதனாக
மாற
எந்த பாதையில்
போவது.?

கருத்துகள் இல்லை: