ஞாயிறு, 28 ஜூன், 2009

என் சுவாசக்காற்றே

மூன்று தினங்கள்
முன் சென்று
ஜனித்திருக்கலாம் நீ
காதலர் தினத்தில்..

நாட்தப்பிய உன்பிறப்பு
வெறுப்பாகிறது
உன் பெற்றோரிடத்தில்.

என் வெறுப்பின்
நீள,அகலங்களை
உணர வேண்டுமெனில்
கேட்டுப்பார் தேம்ஸ் நதிக்காற்றை.
எனது மூச்சுக்காற்று
எப்பொழுதோ
இடம் பெயர்ந்துவிட்டது
ஸைன்’ நதிக்கரையிலிருந்து.!.
உணர்ந்திருந்தால்
உனக்கு புரிந்திருக்கும்
சற்று முன்பு
நீ சுவாசித்த காற்றில்
நான் மட்டுமே கலந்திருப்பதை

கருத்துகள் இல்லை: